இந்தியா

நல்ல திட்டத்தை முதலில் எதிர்ப்பது, அவமதிப்பது; பின்னர் ஏற்றுக்கொள்ளவதுதான் பாஜக-வின் வழக்கம்- காங்கிரஸ்

Published On 2025-05-02 15:04 IST   |   Update On 2025-05-02 15:05:00 IST
  • ஆதார் கார்டு திட்டத்தை பாஜக முதலில் எதிர்த்தது. பின்னர் ஏற்றுக்கொண்டது.
  • ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தோல்வியின் சின்னம் என்றது. அது கொரோனா காலத்தில் முதுகெலும்பாக விளங்கியது.

நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை.

பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்த்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் "நல்ல திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முதலில் எதிர்க்க வேண்டும். அதை அவமதிக்க வேண்டும். பின்னர் மக்களிடம் இருந்து வரும் அழுத்தம் காரணமாகவும், உண்மை நிலவரத்தை அறிந்த பின்னரும் அதை ஏற்றுக்குளொள்வது பாஜக அரசின் வழக்கம்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முதலில் பிரதமர் மோடி தோல்வியின் சின்னம் என்றார். கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு முதுகெலும்பாக விளங்கியது. பட்ஜெட்டில் அதற்கான தொகையை உயர்த்தியது. மேலும், நற்பெயரை எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

அதேபோல்தான் ஆதார் கார்டு திட்டத்தையும் முதலில் எதிர்த்தது. தனிநபர் ரகசியத்திற்கு மிரட்டல் எனத் தெரிவித்தது. பின்னர் ஆட்சிக்கு வந்தபோது அதே ஆதார் கார்டு அனைத்து திட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்தது" என்றார்.

Tags:    

Similar News