இந்தியா

பா.ஜ.க. தலைவர் ஜே.பி நட்டா 

காங்கிரசின் ஊழல் சாதனைகளை ஆம் ஆத்மி முறியடித்துள்ளது - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

Published On 2022-10-17 00:39 IST   |   Update On 2022-10-17 00:39:00 IST
  • டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டு பேசினார்.
  • காங்கிரஸ் அரசு செய்திருந்த அனைத்து ஊழல் சாதனைகளையும் ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது என்றார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் அரசு செய்திருந்த அனைத்து ஊழல் சாதனைகளையும் ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது.

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி கலால் துறையிலும், போக்குவரத்து துறைக்கு பஸ்கள் வாங்குவதிலும், கழிப்பறைகள் கட்டுவதிலும் ஊழல் செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஊழல்களின் கட்சியாக மாறியுள்ளது.

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் ஆட்சி அமைத்த பிறகு எல்லா இடத்திலும் மதுக்கடைகளைத் திறந்துள்ளார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News