இந்தியா
துண்டான கையை மற்றொரு கையில் எடுத்து சென்ற வாலிபர்
- சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- ரெயிலில் பயணித்த போது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அதனை இணைப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் தன்னுடைய ஒரு கை துண்டான நிலையில், அந்த கையை மற்றொரு கையால் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சுமன்குமார் என தெரியவந்தது. அவர் ரெயிலில் பயணித்த போது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அதனை இணைப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.