இந்தியா

வன்முறை குணம் வளர்வதை தடுக்க பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இறைச்சி விற்பனைக்கு தடை - பீகார் அரசு

Published On 2026-02-24 03:17 IST   |   Update On 2026-02-24 03:17:00 IST
  • பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்

பீகாரில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் சந்திபில் பேசிய அவர், பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சிறுவர்களிடையே வன்முறைப் குணம் உருவாவதைத் தடுப்பது, பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாப்பது, சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை தவிர்ப்பது, பொது இடங்களில் தூய்மையைப் பராமரித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார்.

மேலும், மக்களின் உணவு விருப்பங்களுக்கு அரசு எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட விஜய் குமார் சின்ஹா, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், சமூக கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறினார்.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற இடங்களில், இறைச்சிக் கடைகள் பொதுமக்களின் பார்வையில் நேரடியாகப் படாதவாறு திரைகள் அல்லது கண்ணாடி பேனல்கள் மூலம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News