பீகார் சட்டசபை தேர்தல்: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு
- பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
- இதையடுத்து தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து, தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பாட்னாவில் மெகா ரோடுஷோ நடத்தினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.
இந்நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
நாளை மறுதினம் அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.