இந்தியா

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை - பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

Published On 2025-09-19 00:32 IST   |   Update On 2025-09-19 02:56:00 IST
  • முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத உயர்வை அறிவித்தார்.
  • மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளம் வாக்காளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார்.

இந்தத் திட்டம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட, பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு முதலமைச்சரின் நிஷாத் சுயம்சய உதவித்தொகை திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளையும் நிதிஷ் குமார் வெளியிட்டிருந்தார்.  

Tags:    

Similar News