இந்தியா

VIDEO: கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து - ஒருவர் உயிரிழப்பு

Published On 2025-05-21 11:04 IST   |   Update On 2025-05-21 11:04:00 IST
  • அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
  • பேருந்து விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News