இந்தியா
பெங்களூரு: இரவில் சாலையில் நடந்து சென்ற பெண் மருத்துவரிடம் அத்துமீறிய நபர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
- ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.
- இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பணி முடித்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை நபர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏஜிபி லேஅவுட்பகுதியில், நள்ளிரவில் வேலை முடிந்து விடுதிக்குத் நடந்து சென்று கொண்டிருந்த 28 வயது பெண் மருத்துவரிடம் ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.
பின்னர் மருத்துவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார். மருத்துவர் சத்தமிடவே, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோலதேவனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.