இந்தியா
கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது
- உரிய ஆவணங்கள் இல்லாமல் கொல்கத்தாவில் தங்கியிருந்தது தெரியவந்தது.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 8-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது.
இந்தநிலையில் நேற்று கொல்கத்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வங்கதேச மாடல் அழகி சாந்தாபால் கைது செய்யப்பட்டார்.
அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொல்கத்தாவில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 2 ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 8-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.