இந்தியா
null

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23 வரை தடை நீட்டிப்பு

Published On 2025-05-24 06:56 IST   |   Update On 2025-05-24 06:59:00 IST
  • தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் பாதிக்கும்.
  • டர்புலன்ஸ் காரணமாக இண்டிகோ விமானம் அவசரநிலை கருதி பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைய அனுமதி கேட்டது.

ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக இரு நாடுகளும் தத்தமது வான் பரப்பில் எதிரி நாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்தன.

இந்நிலையில் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை மத்திய அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

இதற்காக, மத்திய அரசு வெள்ளிக்கிழமை  ஒரு சிறப்பு அறிவிப்பை (NOTAM) வெளியிட்டது.

சமீபத்திய உத்தரவுகளின்படி, பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான, குத்தகைக்கு விடப்பட்ட அல்லது இயக்கப்படும் விமானங்கள் ஜூன் 23 வரை இந்திய வான்வெளியில் நுழைய அனுமதிக்கப்படாது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இப்போது இந்தியாவைச் சுற்றி பறக்க வேண்டியிருக்கும்.

இது பயண நேரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகளையும் அதிகரிக்கிறது. இதற்கிடையே இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த ஜூன் 24 ஆம் தேதி வரை தடை விதிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

முன்னதாக நேற்று டர்புலன்ஸ் காரணமாக இண்டிகோ விமானம் அவசரநிலை கருதி பாகிஸ்தான் வான் பரப்புக்குள் நுழைய அனுமதி கேட்டது.ஆனால் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News