இந்தியா

அயோத்தி: பெண் பக்தர்கள் குளிக்கும்போது ஆபாசமாக படம் எடுத்த ஊழியர் கைது

Published On 2025-04-12 17:27 IST   |   Update On 2025-04-12 17:34:00 IST
  • மொபைல் போனில் பத்து ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்தனர்.
  • கெஸ்ட் ஹவுஸை மூடிய போலீசார் சௌரப்-ஐ கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் குளிக்கும்போது படம்பிடித்த கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (ஏப்ரல் 11) லை 6:30 மணியளவில் அயோத்தி ராமர் கோயிலின் கேட் எண் 3 க்கு முன்னால் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் குளியறையில் 30 வயது பெண் பக்தர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த விடுதியின் சமையல்காரர் சௌரப் ரகசியமாக அவரை படம்பிடித்துக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக சிக்கினார்.

தொடர்ந்து தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவரின் மொபைல் போனில் பத்து ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்தனர்.

அந்த கெஸ்ட் ஹவுசில் தங்கும் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். மேலும் அந்த கெஸ்ட் ஹவுஸ் முறையான பதிவு இன்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து கெஸ்ட் ஹவுஸை மூடிய போலீசார் சௌரப்-ஐ கைது செய்தனர்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் கடந்த முதல் பிப்ரவரி இறுதி வரை நடந்த மகா கும்பமேளாவின் போது பெண்கள் குளித்து உடை மாற்றும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News