இந்தியா
தீப்பிடித்து எரிந்த விமானம்: விடுதியில் இருந்து கீழே குதித்து தப்பிய மாணவர்கள்- திக் திக் வீடியோ
- அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்தனர்.
- இந்த விமான விபத்து இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விமானத்தில் பயணம் செய்த 241 பேர் மற்றும் அகமதாபாத்தில் விமானம் விழுந்த பயிற்சி டாக்டர்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விமானம் விழுந்த நேரத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
சில மாணவர்கள் இரண்டாவது மாடியில் இருந்து பெட்ஷீட் மூலம் கீழே குதித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.