இந்தியா

விசாரணைக்கு ஆஜர் ஆகாத கெஜ்ரிவால்: அமலாக்கத்துறைக்கு கடிதம்

Published On 2023-11-02 10:40 IST   |   Update On 2023-11-02 14:10:00 IST
  • சம்மன் அனுப்பியது சட்டவிரோதம்
  • அரசியல் உள்நோக்கம் கொண்டது

டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த திங்கட்கிழமை அனுப்பிய சம்மனில், இன்று அலுவலகம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அரவிந்த கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் விசாரணைக்குப்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு அனுப்பிய சம்மனை திரும்பப் பெற வேண்டும் என்றும், சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என்றும், பா.ஜனதாவின் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஜராகாத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News