Video: ராணுவ வீரரை கட்டிவைத்து கடுமையாக தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்..!
- சுங்கச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், ராணுவ வீரர் காரில் இருந்து இறங்கிய விசாரித்துள்ளார்.
- அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர் கபில் கவாத். இவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். விடுமுறை முடிந்த நிலையில் டெல்லிக்கு வாகனம் மூலம் சென்று அங்கிருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் செல்ல முடிவு செய்தார்.
தனது உறவினர் உடன் காரில் சென்றபோது, மீரட்டில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிகமாக நின்றுள்ளது. விமான நிலையத்திற்கு செல்ல தாமதம் ஏற்பட்டதால் கபில் கவாத் கீழே இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவரை தாக்கினர். அத்துடன் அங்கிருந்து ஒரு கம்பியில் கட்டிவைத்து கடுமையாக அடித்து உதைத்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.