இந்தியா

900 அடி உயரத்தில் திக் திக்.. விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய மற்றொரு ஏர் இந்தியா விமானம்

Published On 2025-07-02 01:23 IST   |   Update On 2025-07-02 01:23:00 IST
  • டெல்லியில் இருந்து வியன்னாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது.
  • எச்சரிக்கையாக இருந்த விமானிகள் உடனடியாக விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தனர்.

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதில் 242 பயணிகளில் 241 பேர் இறந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். விமானம் மோதி விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் பலர் கொல்லப்பட்டனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 270 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த 2 நாடுகளுக்கு பிறகு மற்றொரு ஏர் இந்தியா விமானம் விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜூன் 14 அன்று டெல்லியில் இருந்து ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, பாதகமான வானிலை காரணமாக விமானம் திடீரென தரையை நோக்கிச் சரிந்தது. அது 900 அடி உயரத்தில் இறங்கியதும், அவசர சமிக்ஞைகள் உடனடியாக ஒலித்தன. எச்சரிக்கையாக இருந்த விமானிகள் உடனடியாக விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளையும் இடைநீக்கம் செய்துள்ளது.   

Tags:    

Similar News