இந்தியா

நடாஷா பூனாவாலா கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் விலை இவ்வளவு கோடியா?

Published On 2025-12-24 02:35 IST   |   Update On 2025-12-24 02:35:00 IST
  • பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது.
  • 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

புதுடெல்லி:

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குநராக இருந்து வருபவர் நடாஷா பூனாவாலா.

நடாஷா பூனாவாலா கையில் போட்டுள்ள வைர மோதிரம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான் சொல்வதை கேளுங்கள். 126 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை பற்றி நான் பேசப்போகிறேன் என்றதும் உங்கள் நினைவில் வருவது என்ன? பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது. 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் ஏலத்தில் 126 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

நடாஷா பூனாவாலா கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் மதிப்பு சுமார் 126 கோடி ரூபாய்.

அது பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட் குடும்பத்தைச் சேர்ந்தது.

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய இளஞ்சிவப்பு வைரம் அதில் உள்ளது.

சமீபத்தில் கிறிஸ்டிஸ் ஏலத்தில் $13.98 மில்லியன் (சுமார் 126 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கப்பட்டது.

தனது அற்புதமான மற்றும் ஆடம்பரமான நகை சேகரிப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் நடாஷா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News