இந்தியா
பங்குச்சந்தை சரிவு, கேஸ் விலை உயர்வு: பா.ஜ.க. அரசை சாடிய அகிலேஷ்
- சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர்.
- எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என அகிலேஷ் தெரிவித்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் ரூ.33 லட்சம் கோடி மதிப்புள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகளை முரண்பாடான தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர். எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கான்பூரில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அமைதியைக் குலைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.