இந்தியா

மம்தாவை தொடர்ந்து ஆம் ஆத்மியும் அதிரடி: பஞ்சாப்பில் தனித்து போட்டி

Published On 2024-01-24 09:54 GMT   |   Update On 2024-01-24 10:09 GMT
  • மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தயார் என அறிவித்திருந்தது.
  • பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உருவாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது.

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தவில்லை. இங்கு நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்காளத்தில் தனித்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிப்போம். நான் இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளேன் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News