இந்தியா

"உரிமைகளைப் பறிக்கும்" வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Published On 2025-04-05 18:07 IST   |   Update On 2025-04-05 18:07:00 IST
  • காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் நேற்று மாலை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
  • இந்த மசோதா முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார சுயாட்சியைக் குறைக்கிறது.

பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, மேல்சபையில் நேற்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.

வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். வக்பு வாரிய சட்டத் திருந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் நேற்று மாலை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் வக்பு மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் வக்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

"அரசியலமைப்பையே சவால் செய்யும் இந்த மசோதா முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார சுயாட்சியைக் குறைக்கிறது. தன்னிச்சையான நிர்வாகத் தலையீட்டை செயல்படுத்துகிறது. மேலும் சிறுபான்மையினர் தங்கள் மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News