நீட் தேர்வில் வெற்றி பெற கால் விரல்களை துண்டித்துக்கொண்ட உ.பி. இளைஞர் - அதிர்ச்சி பின்னணி
- பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்
- சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.
ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என தீவிரமாக இருந்துள்ளார்.
சூரஜ், பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிர்பந்தத்திலும் இருந்துள்ளார்.
எனவே நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு இருந்தால் எளிதாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.
எனவே அவர் தனது ஒரு காலில் உள்ள 4 விரகலை அவரே துண்டித்துள்ளார். வலிக்காமல் இருக்க அனஸ்தீசியா மருந்து செலுத்திக்கொண்டு இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு தன்னை யாரோ தாக்கியதில் அவ்வாறு ஆனதாக கூறியுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்துக்கு செல்லவே, அவர்கள் சூரஜ் உடைய போனை ஆராய்ந்ததில் அவருக்கு காதலி இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இறுதியில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.
சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.