இந்தியா

கடன் சுமையால் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 சடலங்கள் - பகீர் சம்பவம்

Published On 2025-05-27 15:24 IST   |   Update On 2025-05-27 15:25:00 IST
  • பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர்.

கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் - பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை செய்து கொண்டது கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சகுலாவில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தங்கள் காரில் விஷம் குடித்தார் தற்கொலை செய்து கொண்டனர்.

பஞ்சகுலாவின் செக்டார் 27 இல் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் உடல்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.

இறந்தவர்கள் டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல் (42), அவரது பெற்றோர், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என அடையாளம் காணப்பட்டனர்.

பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் அனைவரும் டேராடூனில் கலந்து கொண்டனர் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து டேராடூனுக்குத் திரும்பும் வழியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர். இந்த தற்கொலைக்கு முதன்மையான காரணம் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.  

Tags:    

Similar News