இந்தியா
ம.பி. அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் சடலத்தை நாய் கவ்விச் சென்ற அவலம்
- சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார்.
- மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்தது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரசு மருத்துவமனையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை, மருத்துவமனை கழிப்பறை அருகே ஒரு நாய் குழந்தையின் சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார். மீட்கும்போது குழந்தையின் உடல் பகுதியளவு சிதைந்திருந்தது.
சிசிடிவி காட்சிகளின்படி, 17 வயது பெண் ஒருவர் கழிப்பறையில் பிரசவித்துவிட்டு, பின்னர் ஒரு நபருடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.