இந்தியா
ராஜஸ்தானில் டெம்போவும் பேருந்தும் மோதி பயங்கர விபத்து.. 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.
- காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜஸ்தானில் பேருந்தும் டெம்போ வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சுனிபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.
இந்த விபத்தில் இர்பான்(38), அவரது மனைவி ஜூலி (34) மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பஸ் ஓட்டுநர் அதிக வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.