இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 65 முறை விமான எஞ்சின் செயலிழப்பு சம்பவங்கள்.. 11 MAYDAY அவசர அழைப்புகள்
- சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகதிடம் (DGCA) இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களை இயந்திரக் கோளாறுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தத் தரவு பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் 2020 முதல் 2025 வரை, 65 விமான எஞ்சின்கள் செயலிழந்த சம்பவங்களும், 11 'மேடே' அழைப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகதிடம் (DGCA) இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்தள்ளது.
இந்த 65 சம்பவங்களிலும், விமானிகள் விமானத்தை அருகிலுள்ள விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக திருப்பி விட்டு விபத்தை தவிர்த்தனர்.
மாதத்திற்கு ஒரு விபத்து ஆபத்து என்ற விகிதத்தில், இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களை இயந்திரக் கோளாறுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தத் தரவு பிரதிபலிக்கிறது.
மேலும் DGCA வழங்கிய தரவுகளின்படி, ஜனவரி 1, 2024 முதல் மே 31, 2025 வரை, பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானி, அவசர தரையிறக்கத்தைக் கோரிய 11 மேடே(MAYDAY) அழைப்புகள் வந்துள்ளன.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான AI-171 மே டே அழைப்பு இந்தத் தரவுகளில் சேர்க்கப்படவில்லை. 11 விமானங்களில் 4, ஐதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது தெரியவந்தது.