இந்தியா

94 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 64 வயது முதியவர் கைது

Published On 2025-12-03 10:45 IST   |   Update On 2025-12-03 10:45:00 IST
  • ஒரு கட்டத்தில் தனது வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த துணியை உருவி எடுத்து காப்பாற்றுமாறு கத்தத் தொடங்கினார்.
  • பெருநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் வடசேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் என்ற பத்ரோஸ் ஜான்(வயது64). இவரது பக்கத்து வீட்டில் 94 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.

இதனை நோட்டமிட்ட முதியவர் ஜோஸ், சம்பவத்தன்று அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்பு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, முதியவருடன் போராடினார்.

ஒரு கட்டத்தில் தனது வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த துணியை உருவி எடுத்து காப்பாற்றுமாறு கத்தத் தொடங்கினார். இதனால் பயந்துபோன முதியவர் ஜோஸ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு வந்தனர்.

அவர்களிடம் முதியவர் ஜோஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவரத்தை கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுகுறித்து பெருநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதியவர் ஜோஸ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தப்பியோடிய அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் முதியவர் ஜோசை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News