ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் காலை 9 மணி நிலவரப்படி பாஜக-95, காங்கிரஸ்-95 ஆகிய இடங்களில் முன்னிலை
4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 81, பாஜக-112 ஆகிய இடங்களில் முன்னிலை
4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 51, பிஎஸ்ஆர் -34, பாஜக -4 இடங்களில் முன்னிலை.
4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ், மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை
4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி, "பொதுமக்கள் பாஜகவுக்கு முழுப் பெரும்பான்மையுடன் ஆசீர்வதித்துள்ளனர். தவறான நிர்வாகமும் அநீதியும் தோற்றுவிடும்; நல்லாட்சியும் நீதியும் வெல்லும்" என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
#WATCH | Counting of votes gets underway in Telangana's Karimnagar pic.twitter.com/35Fw96EglQ
— ANI (@ANI) December 3, 2023
மத்திய பிரதேசத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை செங்கல் சுவரால் எழுப்பி பாதுகாக்கப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது செங்கல் சுவரை உடைத்து அறை திறக்கப்பட்டது.
#WATCH | Brick-wall secured EVM strong room opened at a counting centre in Morena of Madhya Pradesh as counting of votes gets underway pic.twitter.com/6cDnKCCty4
— ANI (@ANI) December 3, 2023
4 மாநில தேர்தல் முடிவுகள்: தபால் வாக்கு எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் பாஜக முன்னிலை. தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையிலா், ராஜஸ்தானில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் சாமி தரிசனம் செய்த காட்சி
நாங்கள் 75 இடங்களுக்கு மேல் பிடிப்போம் என சத்தீஸ்கர் மாநில மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான தம்ரத்வாஜ் சாஹு தெரிவித்துள்ளார்.