இந்தியா

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2025-08-14 19:11 IST   |   Update On 2025-08-14 19:11:00 IST
  • பைட்டர் பைலட்கள் உட்பட ஒன்பது விமானப்படை அதிகாரிகளுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற  பைட்டர் பைலட்கள் உட்பட 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.  

ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக பணியாற்றிய 9 இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு நாட்டின் மிக உயர்ந்த மூன்றாவது வீரதீர பதக்கமான 'வீர் சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வீர் சக்ரா விருது  பெறும் அதிகாரிகளில், குரூப் கேப்டன் ரஞ்சித் சிங் சித்து, குரூப் கேப்டன் மணீஷ் அரோரா, குரூப் கேப்டன் அனிமேஷ் பட்னி, குரூப் கேப்டன் குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்க்வாட்ரான் லீடர் சர்தக் குமார், ஸ்க்வாட்ரான் லீடர் சித்தாந்த் சிங், ஸ்க்வாட்ரான் லீடர் ரிஸ்வான் மாலிக் மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் அர்ஷ்வீர் சிங் தாக்கூர் ஆகியோர் அடங்குவர். ஒருவருக்கு கீர்த்தி சக்ரா விருதும், மேலும் 26 பேருக்கு வாயு சேனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்த ஆபரேஷன் சிந்தூரில் இவர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News