கேரளாவில் ஒரே நாளில் 300 ரவுடிகள் கைது
- ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள்.
- கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் குண்டர்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலால் சமீபகாலமாக அதிக குற்றங்கள் நடந்தன. ஏராளமான ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
அடாவடியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் அதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் போலீசார் நேற்று குற்றவாளிகளை கைது நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
இதில் போதைப்பொருள் வியாபாரிகள், குண்டர்கள், பழைய குற்றவாளிகள், வாரண்டு பிறப்பிக்கப்பட்ட வர்கள் என நேற்று ஒரே நாளில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்க ளில் பலரது வீடுகளில் போலீசார் சோதனையும் நடத்தினர். இதில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
300 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்ற னர். அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தலைமறைவு குற்ற வாளிகள், போதை பொருள் விற்பனை கும்பல், ரவுடிகள் உள்ளிட்டோரை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். கடந்த ஆண்டு இதே போன்று நடத்தப்பட்ட போலீஸ் ஆபரேசனில் 2ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.