இந்தியா
சத்தீஸ்கரில் 19 பெண் போராளிகள் உட்பட 28 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்
- அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்தது.
- நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
சத்தீஸ்கரின் மாவோயிட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று 19 பெண்கள் உட்பட 28 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.
அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SLR, INSAS மற்றும் .303 ரைபிள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை நாராயண்பூர் மாவட்டத்தில் மொத்தம் 287 மாவோயிஸ்ட் போராளிகள் சரணடைந்துள்ளனர் என்று நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
பஸ்தர் பகுதியில் கடந்த 50 நாட்களில் 512 மாவோயிஸ்ட் போராளிகள் வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக பஸ்தார் ரேஞ்ச் ஐஜி சுந்தர்ராஜ் பதிலிங்கம் தெரிவித்தார்.