இந்தியா
சட்டசபைக்குள் செல்பி எடுக்க தடை - உ.பி. சபாநாயகர் அதிரடி
சட்டசபை வளாகத்திற்குள் விதிகளை மீறி செல்பி எடுப்பவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும் என உ.பி. சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று உ.பி., சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலானது. அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் சதீஷ் மஹானா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சட்டசபைக்குள் எம்.எல்.ஏக்கள் செல்பி எடுத்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும்.
சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தின்போது, சட்டசபை வளாகத்தில் தனிப்பட்ட கேமராவை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
மீறுவோரின் மொபைல் போனை அவை காவலர்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...தமிழ்நாடு வந்தது மறக்க முடியாதது- பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு