செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம்

Published On 2021-11-03 06:28 GMT   |   Update On 2021-11-03 09:02 GMT
அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடைபெற உள்ள விழாக்களில் கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி:

பாகிஸ்தானுடன் வங்காள தேசம் நடத்திய போரின் 50-வது வெற்றி தினம், நாடு உதயமான 50-வது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க வரும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வங்காளதேசம் நாட்டில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16 அல்லது 17-ந்தேதியில் இந்த விழா நடைபெற இருக்கிறது.



அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்காளதேசம் சென்று இந்த விழாக்களில் கலந்து கொள்கிறார். வங்கதேச தந்தை முஜிபூர் ரகுமானின் 100-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மார்ச் மாதம்
பிரதமர் மோடி
சென்று வந்தார்.

அப்போது இரு நாட்டு தரப்பிலும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தன. அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டாக்கா செல்கிறார்.

அப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.


Tags:    

Similar News