செய்திகள்
மல்லிகார்ஜுன் கார்கே

கட்சிக்கு தலைவர் இல்லை என்பது பொய்: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சொல்கிறார்

Published On 2021-10-03 20:02 IST   |   Update On 2021-10-03 20:02:00 IST
காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் தலைமை குறித்து விமர்சனம் செய்த நிலையில், சோனியா காந்திதான் தலைவர் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் என்று யாருமில்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கட்சியை விட்டு பல தலைவர்கள் வெளியேறுவது ஏன்?. அவர்களை அழைத்து கட்சித் தலைமை பேச வேண்டும் என கபில் சிபல் பஞ்சாப் விவகாரத்தை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே ‘‘காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லை என்பது பொய். பெரும்பாலான நேரங்களில் கட்சியில் மோதல் இருந்துள்ளது. இது புது விசயம் அல்ல. எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி’’ எனத் தெரிவித்துள்ளார்.

Similar News