செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி ஆலோசனை
பிரதமர் மோடியை பின்பற்றி ராகுல் காந்தியும் 2 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi
புதுடெல்லி:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார்.
2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்த முறை பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் குஜராத் மற்றும் ஒடிசாவில் மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
மோடியை பின்பற்றி ராகுல் காந்தியும் 2 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள். தற்போது ராகுல்காந்தி அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தமிழ்நாடு, கேரளா அல்லது கர்நாடகாவில் மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள். ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டால் அது தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று காங்கிரசார் கருதுகிறார்கள்.
அதன் அடிப்படையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் உறுதி செய்யவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi