'இதுதான் அமெரிக்கா கூறிய மீட்பு' - 165 குழந்தைகளை புதைக்க தோன்றிய குழிகளின் படத்தை பகிர்ந்த ஈரான்
- தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 165 முதல் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியதில் இருந்து நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் மினாப் பள்ளியின் மீதான தாக்குதல்.
தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளிமீது சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தியது அமெரிக்கா மற்றும் ஈரான். இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 165 முதல் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான்மீது கடந்த நான்கு நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் என இரண்டு நாடுகளும் தாக்குதலை தொடர்ந்தாலும், இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்ப இடத்தில் இருந்து சிலர் பேசிய வீடியோக்களும், ரத்தக் கறைகளுடன் உள்ள பள்ளிப்பை புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
இறந்த குழந்தைகளின் சடலங்கள்
இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது. அமெரிக்கத் தரப்பில் அமெரிக்கா பள்ளிகளை குறிவைக்காது, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை புதைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது. இது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்,
"அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்காக தோண்டப்பட்ட கல்லறைகள். அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளன
மிஸ்டர் ட்ரம்ப் வாக்களித்த 'மீட்பு' (rescue) என்பது நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறது. காசா முதல் மீனாப் (Minab) வரை, அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.