உலகம்

எல்லையில் ஆப்கானிஸ்தான் தலிபான் வீரர்கள் 67 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் அமைச்சர்

Published On 2026-03-03 18:41 IST   |   Update On 2026-03-03 18:41:00 IST
  • கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் நடைபெற்ற சண்டையில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டனர்.
  • வடக்கு பலுசிஸ்தானில் நடைபெற்ற சண்டையில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்று நள்ளிரவு ஆப்கானிஸ்தான் தலிபான் படைகளுக்கு எதிரான ஆபரேசனில் 67 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் நடைபெற்ற சண்டையில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டனர். நேருக்கு நேராக இருநாட்டு வீரர்களும் ஒரு இடத்தில் மோதிக் கொண்டனர். 12 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த ஆபரேசனில் உயிரிழப்பு இல்லாமல் தலிபான் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

16 வடக்கு பலுசிஸ்தானில் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் 16 இடங்களில் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவம் 25 இடங்களில் துப்பாக்கிச்சுடுதல் மூலம் பதிலடி கொடுத்தனர். இதில் 27 பேர் கொல்லப்பட்டனர். இதில் துணை ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

திங்கட்கிழமை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை 435 ஆப்கானிஸ்தான் தலிபான் படை வீரர்களை வேட்டையாடியது. 630 பேர் காயம் அடைந்தனர். 188 டேங்குகள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News