உலகம்

'ஈரானின் அணு ஆயுத தயாரிப்பிற்கு ஆதாரமில்லை' - ரஷ்யா

Published On 2026-03-03 19:59 IST   |   Update On 2026-03-03 19:59:00 IST
  • ஈரான்மீதான தாக்குதல் பிராந்தியம் முழுவதும் உணரப்படுகிறது.
  • அனைத்து தரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரான்மீது தாக்குதல் நடத்த பல்வேறு காரணங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று, ஈரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை முறியடிக்கவே இந்த தாக்குதல் என்பது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது புருனே நாட்டின் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் கூறியதாவது; ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் இன்னும் காணவில்லை, இதுதான் போருக்கான முக்கிய காரணமாக, அல்லது ஒரே நியாயமாக முன்வைக்கப்பட்டது. என தெரிவித்தார்.

மேலும் ஈரான் மீதான தாக்குதலின் விளைவுகள் பிராந்தியம் முழுவதும் உணரப்படுவதாகவும், அரபு நாடுகள் பொருளாதாரச் செலவுகளைச் சுமப்பதோடு உயிர்ச்சேதங்களையும் சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து தரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். முதல் கட்டமாக, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் நிறுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். எனவும் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஈரான் ஆரம்பப்பள்ளிமீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும் சுட்டிக் காட்டினார்.

 

Tags:    

Similar News