உலகம்

ஈரான் தாக்குதல் - எல்என்ஜி-யைத் தொடர்ந்து யூரியா, மெத்தனால் உற்பத்தியை நிறுத்தியது கத்தார்

Published On 2026-03-03 20:22 IST   |   Update On 2026-03-03 20:22:00 IST
  • 101 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 39 தற்கொலை ட்ரோன்கள் கத்தார் மீது ஏவல்
  • கத்தார் எரிசக்தி நிலையங்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தியது

எல்எல்ஜியைத் தொடர்ந்து யூரியா, பாலிமர்கள், மெத்தனால், அலுமினியம் போன்ற தனது பிற முக்கிய தயாரிப்புகளின் உற்பத்தியையும் நிறுத்துவதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஸ் லஃபான் மற்றும் மெசைட் ஆகியவற்றில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்என்ஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தியை நிறுத்துவதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், "திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான நிறுவனத்தின் முடிவைத் தொடர்ந்து, கத்தார் நாட்டில் யூரியா, பாலிமர்கள், மெத்தனால், அலுமினியம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட சில கீழ்நிலைத் தயாரிப்புகளின் உற்பத்தியையும் நிறுவனம் நிறுத்துகிறது" என அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, கத்தாரின் வான்பரப்பை நோக்கி 3 குரூஸ் ஏவுகணைகள் , 101 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 39 தற்கொலை ட்ரோன்கள் ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Tags:    

Similar News