செய்திகள்

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டுப்படுத்துவது யார்? உயர் அமர்வுக்கு வழக்கை மாற்றக்கோரி ஆம் ஆத்மி மனு

Published On 2019-03-25 19:24 GMT   |   Update On 2019-03-25 19:24 GMT
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டுப்படுத்துவது யார்? என்பது தொடர்பான வழக்கை விசாரித்து தீர்வுகாண உயர் அமர்வுக்கு வழக்கை மாற்றக்கோரி ஆம் ஆத்மி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசின் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னருக்கும் இடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் போன்ற பிரச்சினைகளில் யார் ஈடுபடுவது என்று நீண்டகாலமாக பிரச்சினை இருந்துவருகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி பிப்ரவரி 14-ந் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் உயர் அமர்வுக்கு மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆம் ஆத்மி அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், உயர் அதிகாரிகளை கட்டுப்படுத்துவது யார்? என்பது தொடர்பான வழக்கை விசாரித்து தீர்வுகாண உயர் அமர்வை விரைவாக அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், தனது தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று டெல்லி அரசின் வக்கீலிடம் தெரிவித்தார்.
Tags:    

Similar News