செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ் மோடியை கைது செய்துள்ளனர் - குலாம் நபி ஆசாத்

Published On 2019-03-20 11:31 GMT   |   Update On 2019-03-20 11:31 GMT
பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ் மோடியை கைது செய்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். #NiravModiExtradition #LondonCourt #Congress #GhulamNabiAzad
புதுடெல்லி:

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் , அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. அவரை நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

இதுதொடர்பாக, அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, நிரவ் மோடி லண்டன் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 



இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ்மோடியை கைது செய்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதே பாஜகதான். தற்போது அவர்கள் தான் அவரை திரும்பி கொண்டு வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ் மோடியை கைது செய்துள்ளனர்.  தேர்தல் முடிந்ததும் நிரவ் மோடியை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என தெரிவித்தார். #NiravModiExtradition #LondonCourt  #Congress  #GhulamNabiAzad
Tags:    

Similar News