'சிறை' உடன் இந்த வருடத்தை மிகச்சிறப்பாக நிறைவு செய்துள்ளது தமிழ் சினிமா - இயக்குநர் சங்கர்
- இறுதிச் காட்சியில் சொல்லப்பட்ட செய்தி வலுவானது மற்றும் மிகவும் தேவையானது.
- தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் இதயங்களைச் சிறைபிடித்துவிட்டார்.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று வெளியான சிறை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் சங்கர் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
'சிறை ஒரு நல்லப் படம். உண்மையிலேயே பல இடங்களில் என்னை கண்கலங்க செய்தது. படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கிறது. விக்ரம் பிரபு படம் முழுவதும் ஒரு உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்ஷய் குமார் மற்றும் அனிஷாவின் நடிப்பு அந்த கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அழகாக பிரதிபலித்துள்ளது.
இந்தச் சிறந்த படைப்பை தந்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் எங்கள் இதயங்களைச் சிறைபிடித்துவிட்டார். இறுதிச் காட்சியில் சொல்லப்பட்ட செய்தி வலுவானது மற்றும் மிகவும் தேவையானது. தமிழ் சினிமா இந்த ஆண்டை ஒரு மிகச்சிறந்த வெற்றியுடன் நிறைவு செய்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.