செய்திகள்

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் கூட்டு அறிக்கை

Published On 2019-02-27 12:43 GMT   |   Update On 2019-02-27 12:43 GMT
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். #oppositionleadersmeet #Indiassovereignty #protect Indiassovereignty
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள பாராளுமன்ற நூலக அரங்கில் இன்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, புல்வாமாவில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் பதிவு செய்யப்பட்டதாகவும், இதற்கு பதிலடியாகவும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாகவும் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டதாகவும்  தெரிவித்தார். #oppositionleadersmeet #Indiassovereignty #protect Indiassovereignty
Tags:    

Similar News