செய்திகள்

மும்பை - ரெயில்வே காத்திருப்பு அறையில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்

Published On 2019-01-01 19:09 IST   |   Update On 2019-01-01 19:09:00 IST
மகாராஷ்டிராவின் பால்கர் ரெயில்வே நிலைய காத்திருப்பு அறையில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். #PalgharRailwayStation #Twins
மும்பை:

மகாரஷ்டிரா மாநிலத்தின் டஹானு நகர் நோக்கி சாயா சவ்ரா என்ற நிறைமாத கர்ப்பிணி தனது கணவர் மற்றும் மாமியாருடன் புறநகர் ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.

ரெயில் பால்கர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது சவ்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பால்கர் ரெயில் நிலையத்தில் சவ்ரா இறக்கப்பட்டார். அங்குள்ள காத்திருப்பு அறையில் அவர் தங்க வைக்கப்பட்டார். உடனடியாக வரவழைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவர்கள் உதவியுட சவ்ரா அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள், தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து, சவ்ரா உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். #PalgharRailwayStation #Twins
Tags:    

Similar News