செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல் - ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2018-12-11 02:31 GMT   |   Update On 2018-12-11 03:37 GMT
சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. #AssemblyElections #ElectionResults2018
தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

5 மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.



மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #AssemblyElections #ElectionResults2018

Tags:    

Similar News