செய்திகள்

பகத்சிங் பயங்கரவாதி எனக்கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட ஜம்மு பல்கலை. பேராசிரியர்

Published On 2018-11-30 14:44 GMT   |   Update On 2018-11-30 14:44 GMT
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை பயங்கரவாதி எனக்கூறிய ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியர் மீது விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. #BhagatSingh #JammuUniversity
ஜம்மு :

ஜம்மு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் முகமது தஜுதீன். இவர் நேற்று பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அவர் பாடம் எடுப்பதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கொடுத்துள்ளனர். 



பகத்சிங்கை பயங்கரவாதி எனக்கூறிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். மாணவர்கள் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பேராசிரியர் முகமது தஜுதீன் மறுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை பயங்கரவாதி என ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியர் கூறியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #BhagatSingh #JammuUniversity
Tags:    

Similar News