செய்திகள்

ரஜினி, கமல் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை- விஜயசாந்தி அறிவுரை

Published On 2018-11-27 10:33 IST   |   Update On 2018-11-27 10:33:00 IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை என்று நடிகை விஜயசாந்தி அறிவுரை வழங்கியுள்ளார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
ஐதராபாத்:

நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர்.

1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார்.

ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தியிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-


திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.

இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
Tags:    

Similar News