செய்திகள்

சபரிமலை கலவரத்தால் பஸ் வர தாமதம்- லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் விபத்தில் பலி

Published On 2018-11-19 11:29 GMT   |   Update On 2018-11-19 11:29 GMT
போலீஸ்காரரிடம் லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கி பலியானார். போலீஸ்காரர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகள் பிந்து (வயது 21). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை வேலை முடிந்து பஸ்சுக்காக காத்திருந்தார். சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்து வரும் கலவரத்தால் பஸ் வர வெகுநேரமானது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பிந்துவின் நண்பர் அஜய்குமார் (27) மொபட்டில் வந்தார். அஜய்குமார் இங்குள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

அஜய்குமாரை பார்த்த பிந்து ஓடிச்சென்று நானும் வீட்டுக்கு வருகிறேன் என்று ‘லிப்ட்’ கேட்டார். இதனையடுத்து பிந்துவிவை ஏற்றிக்கொண்டு அஜய்குமார் புறப்பட்டார்.

கவநாடு என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மொட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பிந்து பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் அஜய்குமார் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News