கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை 2026: அபிஷேக் சர்மா ஹாட்ரிக் டக் அவுட்
- 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
- இந்த போட்டியில் முதல் ஓவரின் 3-வது பந்தில் அபிஷேக் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
தொடக்க ஓவரை நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசினார். அந்த ஓவரில் 3-வது பந்தில் அபிஷேக் சர்மா கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி உள்ளார். அமெரிக்காவுடன் முதல் பந்திலும் பாகிஸ்தானுடன் 4-வது பந்திலும் ஆட்டமிழந்தார். நமீபியாவுடன் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.