செய்திகள்

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பா.ஜனதாவுக்கு ஆர்வம் இல்லை - சிவசேனா எம்.பி. சொல்கிறார்

Published On 2018-11-19 01:14 GMT   |   Update On 2018-11-19 01:14 GMT
அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பா.ஜனதாவுக்கு ஆர்வம் இல்லை என சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். #ShivSena #SanjayRaut #RamTemple
புதுடெல்லி:

சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கோ எந்த ஆர்வமும் இல்லை. அதற்கான அறிகுறியும் அவர்களிடம் தென்படவில்லை. எனவேதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மோடி அரசு தாமதப்படுத்தி வருகிறது.

முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர முடியும் என்கிறபோது, அதே வழியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசால் ஏன் பிறப்பிக்க முடியாது?

அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் தேர்தல் பிரசாரமாக வைக்கவில்லை. ஆனால் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் இல்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பெரிதும் உதவியது. எனவே அவசர சட்டம் பிறப்பிக்க தவறினால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆர்.எஸ்.எஸ். கவிழ்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ShivSena #SanjayRaut #RamTemple 
Tags:    

Similar News