செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு- மத்திய அரசை குறை கூறும் கெஜ்ரிவால்

Published On 2018-10-29 10:00 GMT   |   Update On 2018-10-29 10:00 GMT
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள்தான் முக்கிய காரணம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #DelhiAirPollution #DelhisPollution #Kejriwal
புதுடெல்லி:

டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. குளிர்காலத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எஞ்சி நிற்கும் தாளடிகளை எரிப்பதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இன்று காற்றின் தரம் 348 என்ற நிலையில் இருந்தது. காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், காற்று மாசுக்கு மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள் மீது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.


“டெல்லியில் ஆண்டு முழுவதும் மாசு கட்டுக்குள் உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் (குளிர்காலம்) மத்திய அரசு மற்றும் பாஜக தலைமையிலான அரியானா, காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசுகளால் மோசமான மாசு சூழ்நிலையை டெல்லி எதிர்கொள்ள வேண்டி உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாலும், அவர்கள் எதையும் செய்ய தயாராக இல்லை. இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்” என கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில விவசாயிகளை பிரதமர் மோடி நேற்று வெகுவாகப் பாராட்டியதுடன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள தாளடிகளை எரிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. #DelhiAirPollution #DelhisPollution #Kejriwal
Tags:    

Similar News