செய்திகள்

அமித் ஷாவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு - தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

Published On 2018-10-26 11:49 IST   |   Update On 2018-10-26 11:49:00 IST
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் டெல்லியில் இன்று பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசினார். #GeneralElections2019 #NitishKumar #AmitShah
புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்–பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கிறது.

பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் தான் பெரிய கட்சி என்பதால் மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் அதிக  தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதேபோல் பாஜகவும் கணிசமான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி செயல்பாடுகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.  #GeneralElections2019 #NitishKumar #AmitShah
Tags:    

Similar News